இந்தியன் ரயில்வேயில் நிரப்பப்படாமல் உள்ள 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
இந்திய ரயில்வே துறையில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள், திட்டங்களின் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அப்படி தான் தற்போது ரயில்வே துறை காலிப்பணியிடங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்திய ரயில்வே துறையில் மொத்தமாக 2 லட்சத்து 74 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என தகவல் வெளியாகியுளளது. அதிலும், பயணிகள் பாதுகாப்பு தொடர்பான பிரிவுகளில் மட்டுமே 1 லட்சத்து 70 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை இந்த தகவல்களை தெரிவித்து உள்ளது.
இந்த காலி பணியிடங்களை நிரப்பும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டாலே லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.