#Breaking:சற்று முன்…நீட் நுழைவுத் தேர்வு எப்போது?- வெளியான முக்கிய அறிவிப்பு!
ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முறை நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.அதன்படி,தமிழ்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வை எழுத மே 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஆண்டில் 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில்,நடப்பு ஆண்டில் 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.