டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்த அமைப்புகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது .
விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் , மன், பிரமோத் குமார் ஜோசி, அலோக் குலாட்டி, அனில் தன்பாத் ஆகிய வேளாண் துறையை சார்ந்த நிபுணர்கள் குழுவில் இடம்பிடித்தனர். ஆனால் விவசாயிகள் குழுவில் அமைக்கப்பட்டவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்றும் இந்த குழுவை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிகள் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…