Mayavati - Bahujan Samajwadi Party [File Image]
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளுடன் களமிறங்குகிறது. அதே போல காங்கிரஸ், கட்சியானது, திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணி மூலம் களமிறங்குகிறது.
NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிக்குள்ளேயே இந்தியாவின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் (BRS), ஆந்திர மாநில ஆளும் அரசு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YRS Congress) உள்ளிட்ட ஒரு சில கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறது.
5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!
இந்நிலையில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரதான கட்சிகளில் ஒன்றாக திகழும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி நேற்று தனது முடிவை அறிவித்துள்ளது. கட்சி தலைவர் மாயாவதி தலைமையில், நேற்று உத்திர பிரததேச தலைநகர் லக்னோவில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலப் பிரிவுகளில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால், நாட்டில் அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது என பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.
2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும், நாடு முழுவதும் ஒரு பெரிய தாக்கத்தை இந்த தேர்தல் ஏற்படுத்தும். 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைப்பதில் பகுஜன் சமாஜ் கட்சியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த பலத்தில் தனித்து போட்டியிடும் என்ற உறுதியான முடிவை அறிவித்தார் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தனி பெரும் கட்சியின் ஆதிக்கம் என்பது இருக்காது, ஆனால் உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் பலமுனை போட்டி நிலவும் என மாயாவதி குறிப்பிட்டார். பாஜகவை விமர்சித்த மாயாவதி, காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை பற்றி விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…