No பாஜக.!  No காங்கிரஸ்.! மாயாவதி அதிரடி அறிவிப்பு.! 

Mayavati - Bahujan Samajwadi Party

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளுடன் களமிறங்குகிறது. அதே போல காங்கிரஸ், கட்சியானது, திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணி மூலம் களமிறங்குகிறது.

NDA மற்றும் I.N.D.I.A கூட்டணிக்குள்ளேயே இந்தியாவின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டன. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் (BRS), ஆந்திர மாநில ஆளும் அரசு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (YRS Congress) உள்ளிட்ட ஒரு சில கட்சிகளே இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறது.

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

இந்நிலையில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பிரதான கட்சிகளில் ஒன்றாக திகழும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி நேற்று தனது முடிவை அறிவித்துள்ளது. கட்சி தலைவர் மாயாவதி தலைமையில், நேற்று உத்திர பிரததேச தலைநகர் லக்னோவில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலப் பிரிவுகளில் உள்ள கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால், நாட்டில் அரசியல் சூழல் வேகமாக மாறி வருகிறது என பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார்.

2024 மக்களவைத் தேர்தல் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும், நாடு முழுவதும் ஒரு பெரிய தாக்கத்தை இந்த தேர்தல் ஏற்படுத்தும். 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆட்சி அமைப்பதில் பகுஜன் சமாஜ் கட்சியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.  வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த பலத்தில் தனித்து போட்டியிடும் என்ற உறுதியான முடிவை அறிவித்தார் பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தனி பெரும் கட்சியின் ஆதிக்கம் என்பது இருக்காது, ஆனால் உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் பலமுனை போட்டி நிலவும் என மாயாவதி குறிப்பிட்டார். பாஜகவை விமர்சித்த மாயாவதி, காங்கிரஸ், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளை பற்றி விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்