டெல்லியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஆபரேஷன்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் ஜிகிஷா கோஷ்(28). தெற்கு டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் வசித்துவந்த இவர், 2009-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பணி முடிந்து அலுவலக வாகனத்தில் வீடு திரும்பிய சமயத்தில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, ஹரியானாவின் சூரஜ்கண்ட் அருகே ஜிகிஷாவின் உடல் கண் டெடுக்கப்பட்டது. இவ்வழக்கில், பல்ஜீத் சிங் மாலிக், அமித் சுக்லா மற்றும் ரவி கபூர் ஆகிய மூவரை யும் கைது செய்த போலீஸார், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. மூன்று பேரும் குற்றவாளிகள் என, கடந்த ஜூலை 14-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இவ்வழக்கில் தண்டனை நேற்று அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிகள் ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்தீப் யாதவ் ஆகஸ்ட் 2016-ல் தீர்ப்பளித்தார். மற்றொரு குற்றவாளியான பல்ஜீத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிபதி சந்தீப் யாதவ் தனது தீர்ப்பில், ”குற்றவாளிகள் மூவரும் ஜிகிஷாவை கடத்தி, அவரின் தங்கச் சங்கிலி, 2 கைபேசி கள், 2 நகைகள், வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஆகிய வற்றை பறித்துக்கொண்டு கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.
காட்டுமிராண்டித்தனமாக, மிகக் கொடூரமான முறையில் இந்த குற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. பெண் களுக்கு எதிரான மிக கோரமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
எனவே, குற்றவாளிகள் ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகிய 2 பேருக்கு மரண தண்டனை விதிக் கப்படுகிறது. மற்றொரு குற்றவாளியான பல்ஜீத் சிறையில் நன்னடத்தையுடன் இருந்ததைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம், 2 குற்றவாளிகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…