விண்வெளியில் முளைகட்டிய பயிர்… இஸ்ரோ புதிய சாதனை!

'PSLV C60' ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட POEM-4-இல் இருந்த விதைகள் முளைவிட்டுள்ளதாக எக்ஸ் பக்கத்தில் இஸ்ரோ பதிவு செய்துள்ளது.

BiologyInSpace

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது. விரைவில் அவற்றில் இருந்து இலைகளும் வெளியேறும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இது விண்வெளியில் விவசாயம் செய்யும் முயற்சியின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சோதனையின் வெற்றி, விண்வெளியில் தாவரங்களை வளர்க்கும் இந்தியாவின் திறனைக் காட்டுகிறது.

இந்த சோதனையானது, குறைந்த புவியீர்ப்பு விசையில் தாவரங்களின் வளர்ச்சியை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ள உதவும், இது நீண்ட விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த நிலையில், PSLV C-60 சாட்டிலைட்டின் துணைக்கோளான VSSC விண்கலத்தில், காராமணி விதைகள் முளைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, “விரைவில் இலைகள் உருவாகும்” என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், “காராமணி விதைகள் முளைவிட்டன, முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கிறோம். 7 நாள்களுக்குள் விதை முளைவிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாள்களில் முளைத்தன. வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன்கட்ட பரிசோதனை இதுவாகு” என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, POEM-4 ரோபோட்டிக் கை விண்ணில் செயல்பட தொடங்கியுள்ளது என தற்போது இஸ்ரோ வீடியோ ஒன்றை வெளியீட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Geetha Jeevan
vetrimaaran
2nd session of the Budget Session
Donald Trump Canada
Rohit Sharma about retirement
tn school leave