பூமியிலிருந்து 350 கிமீ உயரம்… விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை!

POEM 3

ஜனவரி 1ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட 11 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என கூறப்பட்டது. இது பூமியில் இருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில் புவி வட்டார சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட்டில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு இந்தியாவாகும்.

15 இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தல்… விரைந்தது INS போர்க்கப்பல்!

இந்த நிலையில், விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாதனை புரிந்துள்ளது. புத்தாண்டு தினமான ஜன. 1ம் தேதி பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் FCPS செல் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. தற்போது அதன் மூலம் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், பூமியிலிருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது.

மின்சாரம் உற்பத்தி செய்யும் செல்லில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பதால் தூய தண்ணீர் மற்றும் வெப்பம் உருவாகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இதனிடையே, ஜன.1 பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்திய பின், பூமியில் இருந்து 350 கி.மீ தாழ்வட்ட பாதையில் POEM என்ற பகுதியில் 10 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டது.

அதில், ஒன்று தான் இந்த FCPS செல். தற்போது இதன் மூலம் தான் விண்வெளியில் மின்சாரம் உற்பத்தி செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக விண்வெளியில் பாலிமர் எலக்ட்ரோலைட் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறித்து ஆய்வு செய்து வந்த நிலையில், தற்போது அதனை சாதித்துள்ளது இஸ்ரோ.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்