இஸ்ரோவின் 100வது ராக்கெட் : விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடக்கம்!

இஸ்ரோவின் -வின் 100வது ராக்கெட்டான GSLV F15 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது.

isro 100th launch

ஆந்திரப்பிரதேசம் :  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி – எப்15 (GSLV-F15) ராக்கெட்டை நாளை, ஜனவரி 29, 2025 அன்று காலை 6:23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவ உள்ளது. இந்த ராக்கெட் NVS-02 எனப்படும் இரண்டாம் தலைமுறை நவிகேஷன் செயற்கைக்கோளை (NavIC) சுமந்து செல்கிறது.

கவுண்டவுன் தொடக்கம் 

நாளை GSLV F15 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது என இஸ்ரோ தற்போது அறிவித்துள்ளது. ESPNG T ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து NVS-2 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த ராக்கெட், மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய விவரம் 

இதன் எடை 2,250 கிலோ மற்றும் இது 3 கிலோவாட் வரை ஆற்றலைக் கையாளும். இதில் L1, L5 மற்றும் S பேண்டுகளில் வழிசெலுத்தல் பேலோடுகள் மற்றும் சி-பேண்டில் உள்ள பேலோடுகள் ஆகியவை அடங்கும். NavIC என்பது இந்தியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் அமைப்பாகும், இது அமெரிக்க GPS போன்று செயல்படுகிறது. இது நிலை, வேகம் மற்றும் நேரம் (PVT) சேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பு இந்தியாவிற்குள்ளும் மற்றும் இந்திய நிலப்பரப்பைத் தாண்டி 1,500 கிமீ வரை செல்கிறது. அதன்படி, இது இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது, ஒன்று ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS), இது 20 மீட்டருக்கும் குறைவான நிலை துல்லியத்தை வழங்குகிறது. மற்றொன்று, குறிப்பிட்ட வழிசெலுத்தல் திறன்களுக்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட சேவை (RS) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

என்ன பயன்? 

இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட் மூலம் அனுப்பப்படும் NVS-02 நவிகேஷன் செயற்கைக்கோள் மூலம் பல பலன்கள் உள்ளது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்,  இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டால் இந்தியா மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு துல்லியமான நேரத் தரவுகளை வழங்கும். மேலும், பருவநிலை முன்னறிவிப்பு, மீனவர்கள் மற்றும் பயணிகளுக்கு கடலில் வழிகாட்டுதல், பாதுகாப்பு பயன்பாடுகள் மற்றும் அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு பயனுள்ள விஷயங்களை வழங்கும். இதில் உள்ள அணுக் கடிகாரம் (Atomic Clock) தகவல்களை அதிக துல்லியத்துடன் வழங்கும் எனவும் இஸ்ரோ கூறுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்