ரஷ்யாவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது . தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது . விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20% வரை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிட் பண்ட் முதலீடுகளை முறைப்படுத்த புதிய மசோதா கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது