தகவல் தொடர்பு இல்லாத விக்ரம் லேண்டர்! சம்பளத்தை உயர்த்தாமல் அதிர்ச்சியளித்த மத்திய விண்வெளித்துறை!

Default Image

சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டும் இறுதியாக ‘விக்ரம்’ லேண்டர் நிலவில் தரையிறக்கிய பின்னும் அதனுடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.  லேண்டர் விக்ரம் உடனான தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய 6வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரை மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் 40 சதவீத ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதை கருத்தில் கொண்டு எஸ்டி, எஸ்இ, எஸ்எஃப் மற்றும் எஸ்ஜிஆகிய பிரிவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோருக்கு கூடுதல் ஊதிய உயர்வுகளை நிறுத்தி கொள்ளும்படி விண்வெளி துறைக்கு மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு 2019ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் இரண்டு வகையான கூடுதல் ஊதிய உயர்வுகள் நிறுத்தப்படுவதாக இந்திய விண்வெளி துறை அறிக்கை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதத்துக்கு சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் குறையும் என கூறப்பட்டு வருகிறது. இந்த ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது காரணம் குறித்து தற்போது பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்