#Chandrayaan3: நிலவின் ரகசியங்களை தேடி நகரும் ரோவர் – புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!
நிலவின் தென் துருவத்தில் உள்ள ரகசியங்களைத் தேடி சந்திரயான்-3 பிரக்யான் ரோவர் நகரும் புதிய வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ.
கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, நிலவின் தென் துருவத்தில் ரகசியங்களைத் தேடி நகரும் பிரக்யான் ரோவரின் புதிய வீடியோ அதாவது 25ம் தேதி நேற்று எடுக்கப்பட்ட காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Chandrayaan-3 Mission:
????What’s new here?Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole ????! pic.twitter.com/1g5gQsgrjM
— ISRO (@isro) August 26, 2023