Breaking: 36 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல் வணிக ரீதியான 36 பிராட்பேண்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.
வணிகச் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான உலகளாவிய சந்தையில் தனது இடத்தை உறுதிப்படுத்தியது இஸ்ரோ.
இந்த 36 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 (எல்.வி.எம்.-3) LVM3 ராக்கெட்டில் மூலம் கொண்டு செல்லப்பட்டது, இது லண்டனை தளமாகக் கொண்ட தகவல் தொடர்பு நிறுவனமான OneWeb க்கு சொந்தமானது செயற்கைக்கோள்கள் ஆகும்.
OneWeb Ltd., வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கான இணைய இணைப்பை செயல்படுத்தும் விண்வெளி மூலம் இயங்கும் உலகளாவிய தொடர்பு நெட்வொர்க் ஆகும்