ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தயாரித்து இருந்தது.
இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர். ஆனால், இறுதிகட்டப் பணியான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே , ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு கொரோனா பரவல் காரணமாக தற்போது 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து வருகிற நவம்பர் மாதம் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 2 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய கட்டுப்பாட்டாளர் சீனிவாசுலு ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.எஸ்.எல்.வி. சி-49, பி.எஸ்.எல்.வி. சி-50 ஆகிய 2 ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…