ஆதித்யா எல்1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!

Published by
பாலா கலியமூர்த்தி

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா-எல் 1 விண்கலம் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் சாதனை படைத்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றியை தொடர்ந்து, கடந்த செப்.2ம் தேதி  சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, ‘பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட்’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர், பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருக்கக்கூடிய அடுக்குகள் கழற்றிவிடப்பட்டு, 648 கி.மீ உயரத்தில், ஆதித்யா-எல்1 விண்கலம் பிரிக்கப்பட்டு, வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பூமியிலிருந்து சுமார்15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி-1 (எல்-1) நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இதன்பிறகு, ஆதித்யா எல்1 விண்கலத்தின் மூன்று கட்ட புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

அதுபோல், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, 16 நாட்களாக பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக உயர்த்தப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த சமயத்தில்,ஆதித்யா-எல்1-லிருக்கும் STEPS கருவியின் சென்சார்கள் பூமியில் இருந்து 50,000 கிமீ தொலைவில் உள்ள அதிவெப்ப மற்றும் ஆற்றல் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிட்டது.

அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்துவிட்டது.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்!

இந்த ஆய்வு முடிவுகளை இஸ்ரோ சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், ஆதித்யா விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. சூரியன்-பூமி லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) நோக்கி அதன் பாதையில் செல்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சூரியக் காற்றின் துகள் பரிசோதனையின் (ASPEX) 2ஆவது கருவி செயல்பட தொடங்கியது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதாவது, விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி தற்போது செயல்பட தொடங்கியுள்ளது என்றும் ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டு வருவதாகவும் தகவல் இஸ்ரோ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

20 minutes ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

1 hour ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

2 hours ago

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

12 hours ago

“அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு” கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…

12 hours ago

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

13 hours ago