வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றி பெற்றது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Space Docking Experiment - ISRO

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள் பரிமாற்றம் செய்யும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் செயல்முறையின் முன்னோடியாக பார்க்கப்பட்டும் இந்த ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி எனும் 4000 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவியது. 20 கிமீ தொலைவில் வெவ்வேறு திசைகளில்நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைகோள்கள் படிப்படிப்பாயாக அதன் தூரங்கள் குறைக்கப்பட்டு. இடையில் பல்வேறு தொழில்நுட்ப இடர்பாடுகள் ஏற்பட்டன .

இருந்தும், இஸ்ரோ தனது முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. கடந்த ஜனவரி 10ஆம் தேதியே  500 மீட்டர் இடைவெளியை 15 மீட்டராக குறைக்க இஸ்ரோ முயற்சி மேற்கொண்டது. தொடர் முயற்சியின் பலனாக ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையில் இந்தியா வெற்றி பெற்று வசதியுள்ளது. இதனை இஸ்ரோ அதிகாரபூர்வமாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட பதிவில்,  ” இரண்டு செயற்கைகோள்களுக்கும் இடையான 15 மீ தூரம் 3 மீ-ஆக குறைக்கப்பட்ட பிறகு, டாக்கிங் துல்லியமாக தொடங்கப்பட்டது. இது வெற்றிகரமான விண்கலம் இணைப்புக்கு வழிவகுத்தது. பின்னர் இந்த இணைப்பு திரும்பப் பெறும் நிகழ்வும் சுமூகமாக முடிந்தது. அதைத் தொடர்ந்து மற்ற செயல்முறைகளும் வெற்றிகரமாக முடிந்தது.” எனவும்,

” ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையை வெற்றிகரமாக நடத்தி முடித்த 4வது நாடாக இந்தியா வரலாற்றில் இடம் பிடித்தது.” என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறையை இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக நடத்தி முடிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO