1000 கிலோ எடையுள்ள பழைய செயற்கைக்கோளை பசிபிக் பெருங்கடலில் வீழ்த்தியது இஸ்ரோ.
Megha-Tropiques-1 செயற்கைகோள்:
Megha-Tropiques-1 என்ற செயற்கைகோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் ஒரு கூட்டுப் பணியாக உருவாக்கப்பட்டது. பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 12-ம்தேதி ஆயிரம் கிலோ எடை கொண்ட மேகா ட்ராபிக்ஸ்-1 எனும் எம்டி.ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவப்பட்டது.
செயற்கைகோள் ஆயுட்காலம்:
ISRO மற்றும் பிரான்சின் மைய தேசிய (CNES) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும். சமஸ்கிருதத்தில் மேகா என்பது ‘மேகம்’ என்றும், பிரஞ்சு மொழியில் ட்ரோபிக்ஸ் என்றால் ‘வெப்ப மண்டலம்’ என்றும் பொருள். இந்த செயற்கைகோளின் பணி ஆரம்பத்தில் 3 ஆண்டுகளுக்கு செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றங்களை உடனுக்குடன் சேகரிப்பு அனுப்பி வருகிறது.
செயலிழக்க செய்ய இஸ்ரோ முடிவு:
செயற்கைகோள் பணிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்கு இடையேயான விண்வெளி குப்பைகள் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு (UNIADC) உறுதியளித்ததன் ஒரு பகுதியாக, செயற்கைக்கோளை செயலிழக்க செய்ய இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, இந்த செயற்கைக்கோளில் உள்ள 125 கிலோ எரிபொருளை மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடலில் முழுமையாக வெளியேற்று வீழ்த்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
வீழ்த்தியது இஸ்ரோ:
இந்த நிலையில், செயலிழந்த மேகா-டிராபிக்ஸ்-1 (எம்டி-1) செயற்கைக்கோளின் “மிகவும் சவாலான” கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவு பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக இஸ்ரோ கூறியுள்ளது. இந்த செயற்கைக்கோள் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியில் சிதைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…