புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Somnath: ஆதித்யா எல்1 விண்கலம் செலுத்தப்பட்ட தினத்தில் தனக்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டாதாகவும் அதன்பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். அதன்படி, கடந்தாண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி புற்று நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்ததாக சோம்நாத் தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சோம்நாத் பேசும் போது, “கடந்தாண்டு எனக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அதாவது, ஆதித்யா எல்1 செலுத்தப்பட்ட நாளில் புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன்” என்றார்.
Read More – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.!
இஸ்ரோ தலைவராக பதவி வகித்த சிவன் ஓய்வு பெற்றபிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி இஸ்ரோவின் 10வது தலைவராக பொறுப்பேற்றார் சோம்நாத். கடந்த இரண்டு வருடமாக இஸ்ரோ தலைவராக பணியாற்றி வரும் சோம்நாத்தின் வழிகாட்டுதலின் கீழ், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, அதே நேத்தில், சந்திரயான் 3 லேண்டர், ரோவரும் வெற்றிகரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.