விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி விண்கலம்! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து
ஜிஎஸ்எல்வி எப்14 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட நிலையில் செயற்கைக்கோள் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய ‘இன்சாட் 3டிஎஸ்’ செயற்கைக்கோளை 2,274 கிலோ எடையில் வடிவமைத்துள்ளது. இதை சுமந்து கொண்டு, ஜிஎஸ்எல்வி எப்14 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்தது.
INSAT-3DS : 16-வது முறையாக விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்..!
இன்சாட் 3டிஎஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதன் பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இன்சாட் 3டிஎஸ் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விண்கலம் ஒரு நல்ல சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது. எங்கள் குழுவில் அங்கம் வகித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
#WATCH | Andhra Pradesh: On the launch of ISRO’s INSAT-3DS meteorological satellite onboard a Geosynchronous Launch Vehicle F14 (GSLV-F14), ISRO Chairman S Somanath says “I am very happy to announce the successful accomplishment of the mission GSLV-F14 INSAT-3DS. The spacecraft… pic.twitter.com/McbU9AJAuH
— ANI (@ANI) February 17, 2024