பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு
2024 புதிய ஆண்டு தொடக்கத்திலேயே ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் உள்ளிட்ட 11 செயற்கைகோள் இன்று காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இதில் வெளிநாடுகளை சேர்ந்த 10 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள், நெபுலா போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டுள்ளது.
எக்ஸ்போசாட் செயற்கைக்கோளில், ‘எக்ஸ்ஸ்பெக்ட், பொலிக்ஸ்’ போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்படி, எக்ஸ்ரே கதிர் மூலம் வானியல் இயக்கங்களை ஆய்வு செய்ய எக்ஸ்போசாட் செயற்கைகோள் ஏவப்பட்டுள்ளது. மொத்தம், 469 கிலோ எடை உடைய செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்..!
திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெப்சாட் என்ற செயற்கைக்கோளும் இந்த பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட்டில் இணைத்து ஏவப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 60வது விண்வெளி பயணம் இதுவாகும். இந்த ராக்கெட்டின் உயரம் 44.4 மீட்டர், எரிபொருள், செயற்கைக்கோள் என மொத்தம் 260 டன் எடை கொண்டது.
இந்த சூழலில், 11 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், போலரி மீட்டர் செயற்கைகோள் கிழக்கு சுற்றுவட்டப்பாதையில் 6 டிகிரி சாய்வுடன் 650 கிமீ தொலைவில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. மேலும், பி.எஸ் 4 என்ற ராக்கெட் பாகம் POEM-3 செயற்கைக்கோளை 350 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PSLV-C58/XPoSat Mission:
Lift-off normal ????????️XPoSat satellite is launched successfully.
????PSLV-C58 vehicle placed the satellite precisely into the intended orbit of 650 km with 6-degree inclination????.
The POEM-3 is being scripted …#XPoSat
— ISRO (@isro) January 1, 2024