நிலவிற்கு செல்ல புதிய திட்டம்!இஸ்ரோவின் அடுத்த மைல்கள்….

Published by
Venu

இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ள கருத்தில்  சந்திராயன் 2 திட்டத்தின் மூலம் நிலவில் தரையிறக்கப்படும் ஆய்வூர்தி, முதல் கட்டத்தில் 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். முதன் முதலில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. ஆனால், சந்திராயன்2 திட்டத்தைப் பொறுத்தவரை, விண்கலம், ஆய்வூர்தி மற்றும் ஆய்வூர்தியை இறக்குவதற்கான லேண்டர் ஆகிய மூன்றும் முதன்முறையாக அனுப்பப்பட உள்ளன.

இவற்றின் மொத்த எடை 3 ஆயிரத்து 290 கிலோ என்பதால் ஜிஎஸ்எல்வி மார்க்2 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சந்திராயன் 2 திட்டம் வரும் ஏப்ரலில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலவின் சுற்றுவட்டப்பாதை, பூமியின் பரப்பில் இருந்து 3 லட்சத்து 82 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஏப்ரலில் ஏவப்பட்ட பின்னர் நிலவின் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதைக்கு சந்திராயன் 2 விண்கலம் செல்ல இரண்டு மாதங்கள் வரை ஆகும். நிலவின் திட்டமிட்ட சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நுழைந்தவுடன் அதிலிருந்து லேண்டர் கருவி பிரிந்து நிலவின் தென்துருவத்தில் இறங்கும்.

பின்னர் லேண்டரில் இருந்து 6 சக்கரங்கள் கொண்ட ஆய்வூர்தி பிரிந்து நிலவின் பரப்பில் 150 முதல் 200 மீட்டர் வரை செல்லும். 14 நாட்களுக்கு நிலவின் பரப்பு குறித்து வேதியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்த ஆய்வுகள் குறித்த தகவல்களை 15 நிமிடங்களுக்குள் நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்தின் மூலம் பூமிக்கு ஆய்வூர்தி அனுப்பும்.

14 நாட்கள் கழித்து ஸ்லீப் மோட் எனும் செயலற்ற நிலைக்கு ஆய்வூர்தி சென்றுவிடும். அதன் பிறகு, சூரிய ஒளி மூலம் ரோவரின் பேட்டரிகள் மின்னேற்றம் பெற்றால் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 2 திட்டத்தின் விண்கலம், லேண்டர், ஆய்வூர்தி மூன்றும் தயாராகிவிட்டது என்றும், அவற்றை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், ஒருங்கிணைப்புக்குப் பிறகு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் சிவன் விளக்கம் அளித்துள்ளார். சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் தேதி, பூமியிலிருந்து ஒப்பிடும்போது நிலவு எந்த நிலையில் இருக்கும் என்பன உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

2 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

3 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

4 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

4 hours ago

சென்னையில் நேர்ந்த சோகம்! காற்றில் பறந்த எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…

5 hours ago

லீக்கான அந்த மாதிரி வீடியோ? சமூக வலைத்தளங்களிருந்து விலகிய பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம்!

பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…

6 hours ago