ISRO-வின் புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை எடுத்து அனுப்பியது செயற்கைக் கோள் கேமரா!
இஸ்ரோ நிறுவனம் , உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேனோ கேமராவான ஐ.என்.எஸ்.-1சி-யால் எடுக்கப்பட்ட புவிப்பரப்பின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த சிறிய செயற்கைக்கோளில் உள்ள கேமரா ஜனவரி 16ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
INS-1Cயால் எடுத்து அனுப்பப்பட்ட புவிப்பரப்பின் உயர்தர புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் அனுப்பும் புகைப்படங்கள் மூலம் நிலப்பரப்பில் காடுகள், வாழ்விடங்கள், விளைநிலங்கள் போன்றவற்றை அறிந்த துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.