இந்தியாவில் உள்ள இஸ்ரேல் நாட்டினர் கவனத்திற்கு… வெடிகுண்டு விபத்து.. முக்கிய அறிவுரைகள்….

Israel PM Benjamin Netanyahu - Israel embassy in Delhi's Chanakyapuri

டெல்லியில், சாணக்யபுரியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று (டிசம்பர் 26) மாலை 5.48க்கு சிறிய அளவில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போதே, இஸ்ரேலிய தூதருக்கு எழுதப்பட்ட ஒரு மர்ம கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தையடுத்து, டெல்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) குழுவும் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

வெற்றி பெறும் வரை போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்..!

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இஸ்ரேலிய தூதரக செய்தி தொடர்பாளர் கை நிர் (Guy Nir) செய்தியாளர்களிடம் கூறுகையில் , டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு விபத்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தூதரகத்தின் துணைத் தலைவர் (இஸ்ரேல்) ஓஹாட் நகாஷ் கய்னார் கூறுகையில், “எங்கள் தூதர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் உள்ளூர் டெல்லி பாதுகாப்பு படையினருடன் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.

இந்த டெல்லி சம்பவத்தை தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டின் சார்பில் , இந்தியாவில் வாழும், குறிப்பாக தலைநகர் டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் நாட்டினருக்கு அந்நாட்டின் சார்பாக சில அறிவுரைகள் வழங்ப்பட்டுள்ளன. அதில், டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த வெடிகுண்டு விபத்து ஒரு தாக்குதலாக கூட இருக்கலாம். இந்தியாவில் மற்றும் குறிப்பாக டெல்லியில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் மால்கள் மற்றும் சந்தைகள் போன்ற நெரிசலான இடங்களுக்கு செல்கையிலும் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக நமது நாட்டை (இஸ்ரேல்) சேர்ந்தவர்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்த்திடுங்கள்.

எப்போதும் விழிப்புடன் இருங்கள். இஸ்ரேலியர்கள் என்பதை வெளிகாட்டிக்கொள்ள வேண்டாம். பாதுகாப்பு இல்லாத இடங்களில் வெளி ஆட்கள் உடன் நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்கவும். சமூக வலைதளங்களில் பயண விவரங்களை பதிவிடுவதை தவிர்க்கவும் என்று பல்வேறு ஆலோசனைகளை கூறுயுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதலே ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே போர் தொடங்கி தற்போதுவரை நடைபெற்று வருகிறது. சில நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டாலும், மீண்டும் அதே போல போர் தொடங்கி காசா நாகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதுவரை காசா நகரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts