நிபா வைரஸ் தொற்று காரணமாக கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிபா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் அங்கு பரவியுள்ளது. இந்த தொற்றால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 12 வயதுடைய சிறுவன் உயிரிழந்தான். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன் நிபாவால் உயிரிழந்ததை தொடர்ந்து இவனுடைய தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்பட்டு புனேவில் உள்ள கிருமியியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் தொற்று தனிமைப்படுத்துதல் பிரிவில் கோழிக்கோட்டை சேர்ந்த 68 பேர் அரசு மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது நலத்துடன் உள்ளனர்.
நேற்று புனே ஆய்வகம் அனுப்பியுள்ள தகவல் படி, 10 பேருக்கு தொற்றில்லை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேலும் 20 பேரின் மாதிரிகளும் நெகடிவ் ஆக வந்துள்ளது. தற்போது 21 பேரின் தொற்று முடிவு இன்னும் வெளிவராமல் உள்ளது. இதற்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…