கொரோனா தொற்று காரணமாக டெல்லியில் 60 குரங்குகள் தனிமைப்படுத்தல் – வனத்துறையினர் நடவடிக்கை!
டெல்லியில் உள்ள 60 குரங்குகளுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அந்த குரங்குகளை தற்பொழுது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
டெல்லியில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு உள்ள வனப்பகுதியில் வசிக்கக்கூடிய குரங்குகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 குரங்குகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி வனத்துறையினர் குரங்குகளை தனிமைப்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
அதில், ஹைதராபாத் மிருகக்காட்சி சாலையில் உள்ள சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்குகளை பிடித்து பரிசோதனை செய்ததாகவும், இதில் 60 குரங்குகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மற்ற விலங்குகளுக்கு பரவக் கூடாது என்பதற்காக 60 குரங்குகளை துக்ளகாபாத்தில் உள்ள விலங்கு மீட்பு மையத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைத்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் 30 குரங்குகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்தல் நிறைவடைந்துள்ளதாகவும், அவை அசோலா பாட்டி வனவிலங்கு சரணாலயத்தில் விடப்படும் எனவும், மீதமுள்ள 30 குரங்குகள் இன்னும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் பின்பதாக பரிசோதனை செய்யப்பட்ட குரங்குகளுக்கு பாசிட்டிவ் என்று ரிசல்ட் வரவில்லை எனவும், பரிசோதனை மேற கொள்ளப்பட்ட குரங்குகளுக்கு எதிர்மறையான ரிசல்ட் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.