மேற்கு வங்கம் மாநிலம் சௌத் பர்கனாஸ் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஒருவரை ஒரு கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கீழே தள்ளிவிட்டுள்ளது.ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்த சம்பவமானது நாட்டையே நாட்டையே அச்சுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட முறை இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இதே போல் இஸ்லாமியர் ஒருவர் மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க இஸ்லாமிய பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் . அவர் பார்கனாஸ் மாவட்டத்திருந்து ஹூக்ளி ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் ஏறிய ஒரு கும்பல் அவரை “ஜெய்ஸ்ரீராம்” சொல்ல சொல்லி தாக்கியுள்ளது. அப்போது யாரும் என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை என்றும் பார்க் சர்க்கஸ் ரயில் நிலையம் வரும் பொது என்னை தூக்கி வீசி விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள டிஜிபி , இந்த குற்றம் செய்த குற்றவாளிகள் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…