உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் செல்கிறது, இந்த கொரனோ வைரஸ் காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற காரணத்தால் இந்த தளர்வுகள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் மந்த்சாரில் உள்ள பசுபதிநாத் கோவிலில் சென்சார் மூலம் கோவில் மணி செயல் படுமாறு வைத்துள்ளார்கள், இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் அந்த மணியை கையை வைத்து அடிக்க தேவையில்லை கையை மணி அருகில் கொண்டு சென்றாலே தானாகவே மணி அடிக்கும் , மேலும் இதன் மூலம் கொரனோ வைரஸ் தடுப்பது மட்டுமில்லாமல் பக்தர்கள் மனதுக்கு நிம்மதியாக கடவுளை வணங்க முடிகிறது என்று கோவில் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த சென்சார் மணியை நாரு கான் மேவ் என்ற முஸ்லிம் நபர் ஒருபர் 6000 ரூபாய் செலவில் உருவாக்கியுள்ளார், 62 வயதான நாரு கான் மேவ் இது குறித்துக் கூறுகையில், கொரனோ ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்த பிறகு மசூதிகளில் மற்றும் அஸான் ஓத அனுமதி கிடைத்தது. மேலும் நான் கோயிலுக்கு வரும் பக்தர்களும் மணியை பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதன் காரணமாகத்தான் சென்சார் மூலம் மணியை தயாரித்து கோவிலுக்கு வழங்கினேன் என்று கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…