கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானதா ? – மருத்துவர்கள் விளக்கம்…!

Default Image

கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை ஆபத்தானது இல்லை என்று மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகளுக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சையும் பரவுதாக தகவல் வெளியாகிறது.

இதனால்,மக்களுக்கு கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை குறித்து பல்வேறு சந்தேகங்களும்,அச்சமும் ஏற்படுகின்றன.மேலும்,வெள்ளை பூஞ்சை தொற்றானது கருப்பு பூஞ்சையைப் போல ஆபத்தானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளன.

இந்நிலையில்,டெல்லியை சேர்ந்த சுரேஷ் குமார் என்ற மருத்துவர் இதுகுறித்து கூறியதாவது,”வெள்ளைப் பூஞ்சை தொற்றானது,கருப்பு பூஞ்சை தொற்றைப் போல அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. அதுமட்டுமல்லாமல்,வெள்ளைப் பூஞ்சை தொற்று இருப்பதை முன்கூட்டியே கண்டறிந்தால்,ஒன்று முதல் ஒன்றரை மாதத்திற்குள் சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.எனவே,கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவரைக் கேட்காமல் கொரோனாவுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம்.குறிப்பாக ஸ்டெராய்டு மருந்துகளை மருத்துவர்களின் அனுமதியின்றி எடுத்துக்கொள்ளக் கூடாது.

இந்த வகைப் பூஞ்சையானது,நெருக்கடியான இடங்கள் மற்றும் ஈரப்பதமான இடங்களில் வளரும் என்பதால்,வீட்டுக்குள் சூரிய வெளிச்சம் படும்படி கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.மேலும்,முகக்கவசங்களை தினமும் துவைத்து உபயோகிக்க வேண்டும்”,என்று கூறினார்.

இதனையடுத்து,மருத்துவர் கபில் சல்ஜியா கூறியதாவது,”கருப்பு பூஞ்சை தொற்றுதான் மிகவும் ஆபத்தானது.ஆனால் கேண்டிடாசிஸ் என்ற வெள்ளைப் பூஞ்சை தொற்று ஆபத்தானது அல்ல.அதனால்,இதற்கு விரைவில் தீர்வு காணமுடியும்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,இந்த வெள்ளைப் பூஞ்சை தொற்றுக்கு வழக்கமான கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள்தான் தென்படும்.இருப்பினும், பரிசோதனை செய்தால் அதில் நெகட்டிவ் என்று வரும்.எனவே HRCT ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு வெள்ளைப் பூஞ்சை தொற்றைக் கண்டறியலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவித்து பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கொரோனா,கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளைப் பூஞ்சை போன்ற எந்த தொற்று ஏற்பட்டாலும்,அதனை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்