காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
இதனிடையே இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக கூறப்பட்டது. இதனால், ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகவும் செய்திகள் வெளியானது.
இதைதொடர்ந்து, கடிதம் எழுதியதற்காகவே பாஜகவுடன் தொடர்பு என குற்றம்சாட்டுவதா..? 30 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியிட்டது கிடையாது என கபில் சிபில் தனது ட்விட்டரில் பதிவை பதிவிட்டார். இதற்கிடையில், குலாம் நபி ஆசாத் “ராகுல் காந்தி தனது கூற்றை நிரூபித்தால் நிரூபித்தால் பதவி விலக தயார்” என்று பதிவில் தெரிவித்தார்.
எனவே காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ராகுல்காந்தி இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை . ஊடகங்கள் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. மோடி ஆட்சியை எதிர்த்து போராடுவதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாறாக ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளக் கூடாது என்று கூறியதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் ராகுல் காந்தி விளக்கம் அளித்ததை தொடர்ந்து தொடர் தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவை கபில் சிபில் நீக்கினார்.இதன் பின் ராகுல்காந்தி இதுபோன்ற கருத்தை கூறவில்லை என தனிப்பட்ட முறையில் விளக்கமளித்துள்ளார். அதனால் எனது ட்விட்டர் பதிவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கபில் சிபில் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…