புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கே இந்த நிலைமையா.? வகுப்பறை மேற்கூரை மாணவர்கள் மீது விழுந்து விபத்து.!
ஆந்திராவில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். வியாகபட்டினம் பத்மநாபம் மண்டலத்தில் உள்ள அர்ச்சகுனிபாலம் தொடக்கப்பள்ளியில் மேற்கூரை பிளாஸ்டர் இடிந்து விழுந்துள்ளது.
இதில் மேற்கூரையின் ஒரு பகுதி மாணவர்கள் மீது விழுந்ததில் மாணவர்களில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் விஜயநகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடக்கப்பள்ளி சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது