5 ஆண்டுகளுக்கு ஊதியமில்லா விடுப்பு.! இதுதான் ஜனநாயக அரசாங்கம் செயல்படும் முறை..? மம்தா பானர்ஜி.!

Default Image

ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை அறிவித்தது. அது என்னவென்றால், LWP எனப்படும் leave without pay scheme திட்டத்தின் கீழ் சில ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பலாம் என தெரிவித்தது.

(LWP ) கட்டாய விடுப்பில் அனுப்பப்படுபவர்களை பட்டியலிடும் பணியும் தொடங்கி உள்ளதாகவும்,  வேலைத்திறன், ஆரோக்கியம் மற்றும் இதற்கு முன் பணிநீக்கம் செய்யப்பட்டவரா..? என்பது போன்ற பல்வேறு காரணங்கள் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறும்என ஏர் இந்தியா கூறியது.

சில ஊழியர்களை ஆறு மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஊதியமில்லாத கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அது எதிர்காலத்தில் நடக்கும் மாற்றங்களை பொருத்து  ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்  என தெரிவித்தது.

ஏர் இந்தியா சில ஊழியர்களை ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்ப  செய்துள்ள முடிவிற்கு மமம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.  இந்நிலையில், இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மமம்தா பானர்ஜி,  மத்திய அரசு கொரோனா வைரஸ்  காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி பயன்படுத்திக் கொள்வதாகவும்,  சட்டங்களையும், விதிகளையும் மாற்றியமைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சில நேரங்களில், அவர்களுக்கு எதிராக எதுவும் சொல்லக்கூடாது என்றும், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் நான் உணர்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு முக்கியமான காலத்தை நாம் கடந்து செல்லும்போது, எல்லோரும் நோயை எதிர்த்துப் போராடுகையில், மத்திய அரசும், பாஜகவும் எடுக்கும் முடிவிற்கு நான் வருந்துகிறேன்.

எந்தவொரு ஆலோசனையுமின்றி அவர்கள் ஏற்கனவே பல சட்டங்களைத் திருத்தியுள்ளனர், பல சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன, மேலும் அவர்கள் தங்கள் சர்வாதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் அதைச் செய்கிறார்கள் என அவர்  கூறினார்.

மேலும், ஒரு ஜனநாயக அரசாங்கம் செயல்படும் முறை இதுதானா..? எல்லாம் தொலைந்துவிட்டது … எல்லோரும் பயப்படுகிறார்கள்,  வெட்கப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்..? என மமம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்