இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா.? ரோஜாவுக்கு எதிராக எழும்பும் கண்டனங்கள்.!
அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என ரோஜா குறித்து கேள்வி எழுப்பும் சமூகவலைதளவாசிகள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக, அனைத்து கடைகளும், பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல நடிகையும், எம்.எல்.ஏ -வுமான ரோஜா அவர்கள், ஆந்திரா மாநிலம், சித்தூரில் உள்ள கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க சென்றுள்ளார். அப்போது அவரை ஊர்மக்கள் அனைவரும் மலர்தூவி வரவேற்றுள்ளனர்.
This video is incredibly disgusting ????????, this is YCP mla Roja, as she is walking people are throwing flowers at her feet , why are YCP mlas indulging in PR exercise during lockdown? First it was Rajini and now Roja pic.twitter.com/mMdH60MeEC
— Adarsh gult (@curryputtar) April 21, 2020
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதனை பார்த்த வலைதளவாசிகள், கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவிவரும் சூழலில், அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படி ஒரு பொறுப்பற்ற செயலை செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.