அட இப்படி ஒரு காதலா..? காதலியை சூட்கேசில் வைத்து அழைத்து செல்ல முயன்ற காதலன்…!
கர்நாடக மாநிலம், உடுப்பியில் இஞ்சினீரிங் விடுதியில், மாணவன் ஒருவன் தனது காதலியை சூட்கேசில் வைத்து அழைத்து செல்ல முயற்சி.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் மணிபால் பகுதியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கிப் பயின்ற மாணவர் ஒருவர் பெரிய சூட்கேசுடன் விடுதிக்குள் நுழைய முயன்றார். அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த காவலர் சூட்கேசுடன் மாணவர் வருவதைப் பார்த்ததும் சந்தேகமடைந்து அதற்குள் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மாணவன் தான் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சந்தேகத்தில் பாதுகாவலர் அந்த சூட்கேசை திறந்து காட்டும் படி தெரிவித்தார். அதற்கு மாணவன் மென்மையான பொருட்கள் இருப்பதாக கூறி சூட்கேசை திறக்க மறுத்துள்ளார்.
பின் பாதுகாவலர்கள் வலுக்கட்டாயமாக சூட்கேஸை திறக்குமாறு கூறியுள்ளார். அப்போது சூட்கேஸை திறந்த போது, அதற்குள் இருந்து பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த பெண் தனது காதலி என்று அவர் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணும் அதே கல்லூரியில் படித்து வருவதாகவும் தெரிவித்தார். இவர்களின் இந்த செயல் பாதுகாவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.