இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடிக்கிறதா? நிர்மலா சீதாராமன் விளக்கம்.!
அமெரிக்கா செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகில் முஸ்லிம் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்றும், மக்கள்தொகை எண்ணிக்கையில் மட்டுமே அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எதிர்க் கட்சியில் உள்ள எம்.பி.க்கள் அந்தஸ்தை இழப்பது குறித்தும், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது குறித்தும் மேற்கத்திய பத்திரிகைகளில் வெளியான செய்திகள் குறித்து சீதாராமனிடம் கேள்வி எழுப்பபட்டது.
நிர்மலா சீதாராமன் விளக்கம்:
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகையை இந்தியா கொண்டுள்ளது, மேலும் அந்த மக்கள்தொகை எண்ணிக்கையில் மட்டுமே அதிகரித்து வருகிறது.
ஆனால், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்து வருகிறது, அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சிறிய குற்றச்சாட்டுகளுக்காக கடுமையாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை போன்ற தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு முஸ்லீம்களும் தங்கள் வியாபாரத்தை சிறப்பாக செய்து வருகிறார்கள், அவர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு தொந்தரவு கூட இல்லை என்று சுட்டிகாட்டினார்.
மேலும், இந்தியாவில் முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை கண்டித்து பேசிய நிர்மலா சீதாராமன், இது இந்திய அரசின் மீது சுமத்தப்படும் பழியாக நான் கருதுகிறேன். இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் நடக்கிறது என்ற கருத்து தவறானது என்றார்.
நீங்கள் சொல்லுங்கள், 2014 க்கு இடையில் இருந்து இன்று வரை மக்கள் தொகை குறைந்துள்ளதா? அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திலாவது கருத்து வேறுபாடு காரணமாக இறப்புகள் அதிகமாகி உள்ளதா? எனவே, இந்த கருத்துக்களை வெளியிட்டவர்கள் இந்தியாவுக்கு வருமாறு நான் அழைக்கிறேன் என்று விரிவான விளக்கத்தை கொடுத்தார்.
நேற்று நடைபெற்ற பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் நடத்திய, இந்தியப் பொருளாதாரத்தின் பின்னடைவு மற்றும் வளர்ச்சி குறித்த விவாதத்தின் போது இதனை பேசியுள்ளார்.