Categories: இந்தியா

பிரதமர் வியாபாரியா அல்லது பிரதிநிதியா? – திரிணாமுல் காங்கிரஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய இந்தியா கூட்டணியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், மோடி அரசை எதிர்த்து பேசினால் அமலாக்கத்துறை வீட்டுக்கு வருமென நாடாளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர் கூறுகிறார். மேற்குவங்க மாநிலத்தை கண்காணிக்க பல்வேறு ஆணையங்களை அனுப்புகிறது மத்திய அரசு.

ஆனால், மத்திய அரசு மணிப்பூருக்கு எந்த ஆணையத்தையும் அனுப்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே மணிப்பூர்  பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனவே, மணிப்பூர் அரசை உடனடியாக கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி என்ன உலகத்தை சுற்றி வரும் தூதுவரா அல்லது விற்பனை பிரதிநிதியா? எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு வழி தவறுகிறபோது நாட்டின் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஆளுநர்களை அனுப்பி தொல்லை அளிக்கிறது மத்திய அரசு. எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்தே அமலாக்கத்துறை, சிபிஐ ஏவப்படுகிறது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற பாஜகவின் வாக்குறுதியை தற்போதும் செயல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகள் தற்போதும் தற்கொலை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். மறுபக்கம் விமான நிலையம், சிமெண்ட் ஆலைகள் உள்பட பல்வேறு நிறுவனங்களை மிரட்டி வாங்குகிறது அதானி குழுமம்.

டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களைவிட அதானி நிறுவனம் வேகமாக வளர்கிறது. இரண்டு, மூன்று தொழில் குழுமம் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து பயன்படுகின்றன. மேலும், வாக்குறுதிப்படி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திறன் மோடி அரசுக்கு இல்லை. கொரோனா காலத்தில் ஒரு கோடி பேர் வேலையை இழந்தனர். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம் என கூறினார், ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.

லடாக், டோக்லாம் எல்லைகளில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்கிறது. வந்தே பாரத் ரயில்களை அவசர கதியில் அறிமுகப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறும் கருணை உள்ளம் கூட பிரதமரிடம் இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி அஞ்சுகிறார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறிவிட்டது என மத்திய அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் பேசினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

18 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

19 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

19 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

20 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

21 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

23 hours ago