புதிய கொரோனா மாறுபாடு ஆபத்தானதா? நிபுணர்கள் சொல்வது என்ன…
கடந்த சில மாதங்களாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகிவந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஓமிக்கிரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 656 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சை பெரும் எண்ணிக்கை 3742 ஆக அதிகரித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா JN 1 புதிய மாறுபாடு குறித்து கவலைப்படத் தேவையில்லை என இந்திய சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2-3 மாதங்களுக்கு முன்னரே பல நாடுகளில் இது பரவினாலும், பெரிய அளவில் தாக்கம் இல்லை.
கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது – சுகாதாரத்துறை அமைச்சர்.!
இது நோயெதிர்ப்பு மண்டலத்தை தாக்கும் திறன் கொண்டிருக்கவில்லை. சளி, தொண்டை வலி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இருப்பினும் பெரும்பாலான மக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் தெரிவித்தனர். இதற்கு ‘பதற்ற வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
கோவிட் 19 – ஜே.என் 1 அறிகுறிகள் :
- பொதுவான காய்ச்சல் அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி ஆகியவை அடங்கும்.
- சிலருக்கு லேசான வயிற்றுவலி அறிகுறிகளும் தென்படும்.
- சிலருக்கு நோயாளிகள் லேசான மேல் சுவாச கோளாறு அறிகுறிகள் தென்படும். இது பொதுவாக நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் மேம்படும்.
- உடல் சோர்வு, பசியின்மை, குமட்டல், சுவை அல்லது வாசனை தெரியாமல் இருத்தல் ஆகியவையும் அடங்கும்