கோவின் இணைய தளத்தில் பதிவிட்ட சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் கசிவா? – மத்திய அரசு விளக்கம்..!

Default Image
  • கோ-வின் இணைய தளத்தில் உள்ள சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும்,
  • தரவு கசிந்ததாக வரும் செய்திகள் போலி என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கோவின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் மொபைல் எண்கள்,ஆதார்,இருப்பிடம் போன்ற தகவல்களை “டார்க் லீக் மார்க்கெட்” என்ற அமைப்பு ஹேக் செய்துள்ளதாக ஒரு ட்விட்டர் பயனர் தெரிவித்தார்.

இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கான ‘கோ-வின்’ இணைய தளத்தில் தங்கள் விபரங்களை பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் தகவல்கள் கசிந்ததாகக் கூறப்படும் செய்திகள் உண்மையில்லை,அந்த செய்திகள் போலியானவை என்றும்,

அனைத்து தடுப்பூசி தரவுகளும் டிஜிட்டல் கோவின் தளத்தில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மேலும்,இது தொடர்பாக,மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கோ-வின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று சில ஆதாரமற்ற ஊடக அறிக்கைகள் வந்துள்ளன.ஆனால்,இந்த அறிக்கைகள் போலியானவை என்று தோன்றுகிறது”,என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,தடுப்பூசி நிர்வாகத்திற்கான அதிகாரம் பெற்ற குழுவின் (கோ-வின்) தலைவர் டாக்டர் ஆர் எஸ் ஷர்மா கூறுகையில்,

  • கோ-வின் இணையதளம் ஹேக்கிங் செய்ததாகக் கூறப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்தினோம்.
  • எனவே,இதுதொடர்பாக,கோ-வின் இணையதளத்தில் அனைத்து தடுப்பூசி குறித்த தகவல்களும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலில் சேமிக்கப்படுகிறது என்று கூற விரும்புகிறோம்.
  • ஏனெனில்,கோ-வின் தளத்திற்கு வெளியே எந்தவொரு நிறுவனத்துடனும் தடுப்பூசி குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை”,என்று தெரிவித்தார்.

இதனையடுத்து,மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் தடுப்பூசி நிர்வாகத்திற்கான அதிகாரம் பெற்ற குழு (ஈஜிவிஏசி) இணைந்து,கோ-வின் இணையதள கசிவு தொடர்பாக வரும் செய்திகள் குறித்து,மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MietY) கணினி அவசரநிலை பதிலளிப்பு குழுவிடம் விசாரித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்