Categories: இந்தியா

கர்நாடகாவில் ஆட்சியமைக்க போவது பாஜகவா? காங்கிரேசா? – நாளை வாக்கு எண்ணிக்கை!

Published by
பாலா கலியமூர்த்தி

224 தொகுதிகள் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1957-இல் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் இருந்து நடந்த தேர்தலில் இதுவே அதிகமாகும்.

இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த தகுதியானவர்களாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 224 தொகுதிகள் நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. மே 10-ஆம் தேதி நடைபெற்ற  வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள், 75,603 மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவு அறிவிக்கப்பட உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 2,615 வேட்பாளர்கள் காலத்தில் உள்ளனர். தொங்கு சட்டப்பேரவையா? இல்லை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போவது காங்கிரேசா? பாஜகவா? என்பது நாளை வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும். எனவே, கர்நாடக சட்டப்பேரவையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

19 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

25 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

45 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

1 hour ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago