காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது ? என்று ராகுல் காந்தி கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.பாஜக தனிப்பெருமபான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.இதன் பின் மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை அடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாககாங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு முடிந்த நிலையில், கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. காணொளி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்த கூட்டத்தில் ,காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை மாற்றம் வேண்டும் என கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்கள் பின்னணியில் பாஜக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சோனியா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை மாற்றம் குறித்து கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று ராகுல் கேள்வி எழுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே ராகுலின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் குற்றச்சாட்டிற்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக விசுவாசமாக பணியாற்ற வருகிறேன் .30 வருடங்களில் பாஜகவிற்கு சாதகமான எந்த ஒரு கருத்தையும் தெரிவித்தது இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…