ரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்செரிகை நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசானது ஏற்கனவே நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை ஜூன் மாதம் முதல் அமல்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.
இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தற்போது அமல்படுத்தினால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என பல தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறி, இதனால் உடனே இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரீபக் கன்சால், சஞ்ஜய் குமார் விசன் ஆகிய வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் கூறுகையில், ‘ ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஜூன் மாதம் அமல்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.
மேலும், தற்போதைய சூழ்நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த முடியுமா என மத்திய அரசுதான் கலந்தாலோசிக்க வேண்டும்.’ என கூறி வழக்கை முடித்துவைக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…