இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்கு ஆணுறைகள் போன்ற கருத்தடை மருந்துகளை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துவது நல்லது.
நாடு முழுவதும் பரவிய கொரோனவை தடுக்க கடந்த ஜனவரி முதல் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி குறித்து நிறைய விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எதை எல்லாம் பின்பற்ற வேண்டும், எதை எல்லாம் பின்பற்ற கூடாது என கேள்வி எழுந்து வருகிறது. அதிலும், குறிப்பாக கொரோனா தடுப்பூசி எடுத்த பிறக உடலுறவு கொள்ளலாமா..? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.
ஆனால், சுகாதார அமைச்சகம் இது குறித்து முறையான வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை என்றாலும், மருத்துவ நிபுணர்கள் ஆண்களும், பெண்களும் இரண்டாவது அளவு டோஸ் எடுத்த பிறகு கருத்தடை மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
இருப்பினும், தடுப்பூசியின் நீண்டகால பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா..? என்பதையும், உடலுறவு கொண்டால் அவை ஒரு ஆணையும், பெண்ணையும் பாதிக்குமா..? என்பதையும் சொல்வது மிகவும் எளிது. தடுப்பூசி போடப்பட்ட ஒருவர் உடலுறவில் இருந்து விலகுவது எப்போதும் சாத்தியமில்லை என்று காஜியாபாத்தின் கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மருத்துவர் தீபக் வர்மா கூறினார்.
இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்கு ஆணுறைகள் போன்ற கருத்தடை மருந்துகளை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துவது நல்லது. தடுப்பூசிகள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்பது தெரியாது என்பதால், ஆணுறை பயன்படுத்துவது மிகச் சிறந்த தடுப்பு ஆகும் என தீபக் வர்மா தெரிவித்தார்.
தடுப்பூசிக்கு தகுதியான பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும் என கூறினார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…