கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா..? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!

Default Image

இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்கு ஆணுறைகள் போன்ற கருத்தடை மருந்துகளை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துவது நல்லது. 

நாடு முழுவதும் பரவிய கொரோனவை தடுக்க கடந்த ஜனவரி முதல் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவ முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது. பின்னர், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி குறித்து நிறைய விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா தடுப்பூசி எடுத்த பிறகு எதை எல்லாம் பின்பற்ற வேண்டும்,  எதை எல்லாம் பின்பற்ற கூடாது என கேள்வி எழுந்து வருகிறது. அதிலும், குறிப்பாக  கொரோனா தடுப்பூசி எடுத்த பிறக  உடலுறவு கொள்ளலாமா..? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.

ஆனால், சுகாதார அமைச்சகம் இது குறித்து முறையான வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை என்றாலும், மருத்துவ நிபுணர்கள் ஆண்களும், பெண்களும் இரண்டாவது அளவு டோஸ் எடுத்த பிறகு கருத்தடை மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

இருப்பினும், தடுப்பூசியின் நீண்டகால பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா..? என்பதையும், உடலுறவு கொண்டால் அவை ஒரு ஆணையும், பெண்ணையும் பாதிக்குமா..? என்பதையும் சொல்வது மிகவும் எளிது. தடுப்பூசி போடப்பட்ட ஒருவர்  உடலுறவில் இருந்து விலகுவது எப்போதும் சாத்தியமில்லை என்று காஜியாபாத்தின் கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மருத்துவர் தீபக் வர்மா கூறினார்.

இரண்டாவது டோஸ் பெற்ற பிறகு குறைந்தது 2 முதல் 3 வாரங்களுக்கு ஆணுறைகள் போன்ற கருத்தடை மருந்துகளை ஆண்களும் பெண்களும் பயன்படுத்துவது நல்லது.  தடுப்பூசிகள் நம்மை எவ்வாறு பாதிக்கின்றன என்பது  தெரியாது என்பதால், ஆணுறை பயன்படுத்துவது மிகச் சிறந்த தடுப்பு ஆகும் என தீபக் வர்மா தெரிவித்தார்.

தடுப்பூசிக்கு தகுதியான பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்