மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்க்கும் பட்சத்தில் மத்திய அரசு அந்த புதிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டியது தானே என பிரியங்கா காந்தி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் வேளாண் திட்டங்கள் மூலமாக நன்மை அடைவார்கள் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தாலும், விவசாயிகள் அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனும் ஒற்றை கோரிக்கையை வைத்து இன்னும் போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
இந்நிலையில், பிரியங்கா காந்தி அவர்கள் இது குறித்து பேசுகையில், விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 80 நாட்களாக போராடி வருகிறார்கள். கோடை காலமும் தற்பொழுது தொடங்கிவிட்டது, இருந்தாலும் அவர்கள் போராட்டம் செய்து கொண்டே இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு வேளாண் சட்டம் நன்மை பயக்கும் என பிரதமர் கூறினாலும், விவசாயிகள் இந்த சட்டம் வேண்டாம் என்று தானே கூறுகிறார்கள், அவர்களே வேண்டாம் என்று கூறும் பொழுது ஏன் அதை திரும்பப் பெற மறுக்கிறீர்கள் என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…