ஊரடங்கு தளர்வு.. “ஐபிஎல்” போட்டிகள் நடத்த வாய்ப்பு..?
மத்திய அரசு பார்வையாளர்களின்றி மைதானத்தை திறக்க அனுமதி கொடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் இருக்கும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள் ஆகியவை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு பார்வையாளர்கள் இன்றி மைதானங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு முன் விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சி பெற அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தனர். காரணம் ஒலிம்பிக் போன்ற போட்டிகள் நடைபெற இருப்பதால், பயிற்சி பெற அனுமதி கேட்டனர்.
இந்நிலையில் மத்திய அரசு பார்வையாளர்களின்றி மைதானத்தை திறக்க அனுமதி கொடுத்துள்ளது. இதனால், ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது. காரணம் முதன்முதலாக ஒரு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த மத்திய அரசிடம் அனுமதி கோரி நிலையில், மத்திய அரசு அனுமதி தரவில்லை. ஆனால் தற்போது பார்வையின்றி மைதானங்கள் இயங்க அனுமதி கொடுத்துள்ளது. இதனால் ஐபிஎல் நிர்வாகிகள் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று ஐபிஎல் போட்டிகள் நடத்த வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போது ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.