மனிதாபிமானம் மாண்டு போயிற்றோ? சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள்!

Published by
லீனா

சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடிய கிராம மக்கள். 

சமீப காலமாக விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் பல  கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், அசாம் மாநிலத்தில், அங்கு வசிக்கும் கிராம மக்கள், சிறுத்தைகளை கொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனையடுத்து, அசாம்  மாநிலத்தில்,கடப்பாரி கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள், ஒரு சிறுத்தையை கொன்று அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடியுள்ளனர். 

இவர்களது இந்த செயல் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த செயல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நடந்துள்ளது என்றும், பொறியில் சிக்கிய சிறுத்தை, அது தன்னை விடுவித்துக் கொள்ள சிறிது நேரம் எடுக்கும், நாங்கள் அங்கு விரைந்து செல்வதற்குள், அங்குள்ள மக்கள் அதனை கொன்று விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், அவர்கள் கொன்ற சிறுத்தையின்  நகங்கள்,பற்கள், தோல்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கடப்பாரி கிராம மக்கள் கூறுகையில், அந்த சிறுத்தை சமீப காலமாக அங்குள்ள கோழி, ஆடுகளை வேட்டையாடி வாந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அசாமில், இது கொல்லப்பட்டுள்ளது 5-வது சிறுத்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கேரளாவில் யானைக்கு அன்னாசியில் வெடி மருந்து வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிறுத்தைக்கு நடந்துள்ள இந்த கொடுமை அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

7 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

8 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

8 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

9 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

10 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

10 hours ago