மனிதாபிமானம் மாண்டு போயிற்றோ? சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்ற மக்கள்!
சிறுத்தையை கொன்று ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடிய கிராம மக்கள்.
சமீப காலமாக விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தில், அங்கு வசிக்கும் கிராம மக்கள், சிறுத்தைகளை கொல்லுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனையடுத்து, அசாம் மாநிலத்தில்,கடப்பாரி கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள், ஒரு சிறுத்தையை கொன்று அதனை ஊர்வலமாக கொண்டு சென்று கொண்டாடியுள்ளனர்.
இவர்களது இந்த செயல் இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த செயல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நடந்துள்ளது என்றும், பொறியில் சிக்கிய சிறுத்தை, அது தன்னை விடுவித்துக் கொள்ள சிறிது நேரம் எடுக்கும், நாங்கள் அங்கு விரைந்து செல்வதற்குள், அங்குள்ள மக்கள் அதனை கொன்று விட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கொன்ற சிறுத்தையின் நகங்கள்,பற்கள், தோல்கள் அனைத்தையும் பிடுங்கி விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கடப்பாரி கிராம மக்கள் கூறுகையில், அந்த சிறுத்தை சமீப காலமாக அங்குள்ள கோழி, ஆடுகளை வேட்டையாடி வாந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அசாமில், இது கொல்லப்பட்டுள்ளது 5-வது சிறுத்தை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கேரளாவில் யானைக்கு அன்னாசியில் வெடி மருந்து வைத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிறுத்தைக்கு நடந்துள்ள இந்த கொடுமை அசாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.