நவம்பரில் கொரோனா உச்சமா ? ஐசிஎம்ஆர் விளக்கம்
நவம்பரில் கொரோனா உச்சமா ? என்பது குறித்து ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,922லிருந்து 3,32,424ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,379லிருந்து 1,69,798ஆக உயர்ந்துள்ளது .கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,195ருந்து 9,520ஆக உயர்ந்துள்ளது.நாட்டிலே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,07,958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 50,978ஆகவும்,உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,950ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நவம்பர் மாத மத்தியில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்குமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு முடிவு வெளியிட்டதாக செய்திகள் வெளியாகியது.இந்நிலையில் இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.அதாவது, இந்தியாவில் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என்று தெரிவித்துள்ளார்.