இந்தியாவில் கொரோனா வீரியம் அதிகரிக்கிறதா? குறைகிறதா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இருப்பினும் கடந்த ஒரு மாத காலமாக உலக அளவில் நாளுக்கு நாள் கொரானா வைரஸ் அதிகரிக்கக் கூடிய இடத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது. தற்போதும் அதே இடத்தில் இருந்து வந்தாலும், தினமும் ஒரு லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்ட இடத்தில் தற்போது 70,000 முதல் 80,000 வரை தான் பாதிப்பு புதிதாக ஏற்படுகிறது, சற்று குறைந்துள்ளது என்று கூறலாம்.
இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,809 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 963 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் 6,832,98 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், 105,554 பேர் இவர்களில் உயிரிழந்துள்ளனர். 5,824,462 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 902,972 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.