ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க ஐ.நா வில் நடந்த வாக்கெடுப்பில் முடிவு. இதற்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு.
சில நாடுகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அரசாங்க அனுமதியுடன் பயன்படுத்து வந்தாலும், இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகளில் மருத்துவ பயன்பாட்டிற்கு கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கஞ்சா மீது உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பலதரப்பட்ட கருத்துக்கள் தெரிவித்து வந்தனர்.
ஐ.நா.வின் போதை மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் உலகில் உள்ள 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்நிலையில் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு, ஆதரவாக 27 நாடுகள் வாக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இதில், பெருபான்மையான வாக்குகள் பெற்றதால், கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் கஞ்சாவை ஆபத்தான போதைப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆதரவு அளித்துள்ளது. ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளன. மேலும். இந்த வாக்கெடுப்பில் உக்ரைன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…