பாஜக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் முடிவு.
பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதலமைச்சராக இருக்கிறார். எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல், பாஜகவுடன் கருத்து வேறுபாடு காரணமாக, சமீப காலமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்து இருந்தார்.
பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை விட ஐக்கிய ஜனதா தளம் குறைந்த இடங்களை பிடித்து இருந்தது. இருப்பினும், கூட்டணியில் உள்ளதால் நிதிஷ் குமார் முதலமைச்சராக உள்ளார். பாஸ்வான் கட்சி உடைந்தது போல ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் எந்த நேரமும் வெளியேறக்கூடும் என்று தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…